பக்கம்:கன்னித் தமிழ்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபாடபுரம் 33

வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியனே கபாடபுரத்திற்கு வந்த மன்னன். ஆகவே அவனே இடைச் சங்கத்தைப் போற்றிப் பாதுகாத்த பாண்டியர் களில் முதல்வன். அவன் முதலாக ஐம்பத்தொன்பது பாண்டியர்கள் கபாடபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தார்கள். அந் நகரத்தில் கடைசியாக ஆண்ட பாண்டியன் முடத்திருமாறன் என்பவன். இந்த ஐம்பத்தொன்பது பாண்டியர்களுக்குள் கவிஞர்களாக விளங்கினவர்கள் ஐந்து பேர். மொத்தம் ஐம்பத் தொன்பது புலவர்கள் இடைச் சங்கத்தில் இருந்தார் கள். பல புலவர்கள் கவிதைகளை இயற்றி இடைச் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள். அப்படிப் பெற்றவர்கள் 3700 பேர். ‘இடைச் சங்கம் இருந்தார் அகத்தியருைம் தொல்காப்பியனரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளுர்க்காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்ப தின்மர் என்ப’ என்று இறையனரகப்பொருள் உரை காரர் சொல்கிறார். -

முதற் சங்கத்தில் சிவபெருமானும் முருகனும் குபேரனும் ஆகிய தெய்வங்களைப் புலவர் கூட்டத்திலே சேர்த்து எண்ணினர்கள். இடைச் சங்கத்தில் இருந்த துவரைக் கோன் கண்ணபிரான் என்று கூறுவர் சிலர். முதற் சங்கத்தைத் தொடங்கிப் பாண்டியனுக்கு அறிவுரை பகர்ந்த அகத்தியமுனிவர் இடைச் சங்கத் திலும் இருந்தார். அவருடைய மானக்கர்களில் தலை சிறந்த தொல்காப்பியரும் இடைச் சங்கப் புலவர் களில் ஒருவர். -

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/41&oldid=613245" இலிருந்து மீள்விக்கப்பட்டது