பக்கம்:கன்னித் தமிழ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச் சங்கம் 39

தெரியவருகிறது. மதுரை இராசதானியாவதற்குமுன் மணலூர் என்ற நகரமே பாண்டியருக்குத் தலைநக ராயிற்று. கடல் கோளில் வருந்திய பாண்டியன், ‘இனிக் கடற்கரையை அடுத்து வாழ்ந்தால் மீட்டும் நகரம் கடலுக்கு இரையாகுமோ!’ என்று எண்ணி உள் நாட்டில் ஒரு தலை நகரத்தை அமைக்கத் தீர்மா னித்தான். பாண்டி நாட்டின் நடுவில் அவ்வாறே ஒரு நகரத்தை அமைத்து மிகப் பழங்காலத்தில் பாண்டியர் தலை நகராகத் தெற்கே இருந்து விளங்கிய மதுரை என்ற பெயரையே அதற்கு வைத்தான்.

மதுரை தலைநகரான பிறகு பாண்டியன் செய்த முதற் காரியம் புலவர்களை வருவித்துச் சங்கம் அமைத் ததுவே. பாண்டி நாட்டு வளப்பத்துக்கு அரச நீதி முதலியன காரணமாக இருந்தாலும், தமிழ் வளர்ச்சியே மிகச் சிறந்த காரணம் என்பதை உணர்ந்த பாண்டி யன் சங்கத்தை மீட்டும் நிறுவினன். பல திசையினின் றும் சிறந்த புலவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த மூன்றாவது சங்கத்தைக் கடைச் சங்கம் என்று பிற்காலத் தார் வழங்குவர்.

கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களுள் தலைமை பெற்றவர்கள் 49 பேர். இனிக் கடைச் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனு ரும், அறிவுடையரனரும், பெருங்குன்றுார்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நவ்வந்துவன ரும், மருதன் இளநாகனரும், கணக்காயனுர் மகளுர் நக்கீரனுரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்! பதின்மர் என்ப’ என்று இறையனரகப்பொருள் உரையில் வருகிறது. ------ --------------- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/47&oldid=613264" இலிருந்து மீள்விக்கப்பட்டது