பக்கம்:கன்னித் தமிழ்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፬ V

கடைச் சங்க நூல்கள் என்று சொல்லும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்பன, தொல்காப்பியத்துக்கு அடுத்தபடியாகப் பழமையை உடையவை. அவற்றில் சங்கம் என்ற ஒன்று இருந்த செய்தியை விளக்கமாகச் சொல்லும் பாடல் ஒன்றும் இல்லே. ஆகவே சங்கம் இருந்தது என்ற செய்தியே வெறும் கற்பனை என்று சொல் கிறவர்களும் இருக்கிறார்கள். . -

சங்க காலத்து நூல்களில் உள்ள பாடல்கள் யாவுமே ஒரே காலத்தில் பாடப்பெற்றவை அல்ல. வெவ்வேறு காலத்தில் இருந்த புலவர்கள் பாடியவை. ஆதலால் சங்கம் பல ஆண்டுகள் இருந்து விளங்கியிருக்கவேண்டும். அந்தக் காலம் எது? சிலப்பதிகாரத்தில் வரும் கயவாகுவின் காலத்தைக் கொண்டு சங்கத்தின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில் என்று பெரும்பாலோர் தீர்மானித் திருக்கின்றனர். அந்த முடிவையும் தவறு என்று சொல்லி ஐந்தாம் நூற்றாண்டு என்று காலத்தைப் பின் தள்ளிக் காட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்தப் புதிய ஆராய்ச்சிகள் தோன்றுவதற்கு முன்னே சங்கம் முதலியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவி யாக இருந்தவை சில உரை நூல்கள். முக்கியமாக இறை யரைகப் பொருள் உரையில்தான் ஒருவாறு தொடர்ச்சி யாகச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் சில செய்தி களேச் சொல்கிறார், நச்சினர்க்கினியர் தொல்காப்பிய உரையில் அந்த நூலேப் பற்றி அவர் காலத்து வழங்கிய சில செய்திகளே எடுத்துச் சொல்கிறார், அவற்றைக் கொண்டே மூன்று சங்கங்கள் இருந்தன என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிருேம்.

கர்ண பரம்பரையாக வந்த செய்திகளே வைத்தே அந்த உரைகாரர்கள் அவற்றை எழுதினர்கள். அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/5&oldid=613274" இலிருந்து மீள்விக்கப்பட்டது