பக்கம்:கன்னித் தமிழ்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கன்னித் தமிழ்


யாகப் பாராட்டுகின்றன. தமிழ்ச் சங்கத்தைத் தன்பாற் கொண்ட மதுரைமா நகரத்தை ஒரு புலவர், “தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மரபின் மதுரை’ என்று கூறுகிறார்,

புலவர்கள் அறிவு மாத்திரம் நிரம்பியிருந்தால் அவர்களுக்குப் பெருமதிப்பு வராது. கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற மூன்றிலும் சிறந்திருந்தமையால் அவர்களைக் கண்டு அரசர்களும் வணங்கினர். எல்லாக் குணங்களும் நிறையப் பெற்றவர்களைச் சான்றாேர் என்று வழங்குவது தமிழ் மரபு. சங்கத்துப் புலவர்களை நல்லிசைச் சான்றாேர் என்றும், சான்றாேர் என்றும் குறிப்பது புலவர் இயல்பு. ஒழுக்கம் நிரம்பியவர்கள் என்பதை இந்த வழக்குத் தெளிவிக்கின்றது.

புலவர்கள் தமிழாட்சி நடத்தினர்கள். அவர்கள் செலுத்தும் அதிகாரம் எந்த நாட்டிலும் செல்லும். அந்த அதிகாரம் ஒருவர் கொடுத்து வந்ததன்று. மிகப் பழங்காலந் தொடங்கியே அந்த ஆணை புலவர்பால் இருந்து வருகிறது. அதனைத் தொல்லாணை என்று குறிப்பார்கள். ஒரு புலவர். பாண்டியன் ஒருவனைச் சிறப்பிக்கின்றார். அவன் இத்தகைய சங்கத்துச் சான்றாேர்களோடு ேச ர் ந் து தமிழின்பத்தைக் கூட்டுண்ணும் சிறப்பை உடையவனும். பழைய காலந் தொடங்கி மாருமல் வருகின்ற ஆணையைப் படைத்த நல்ல ஆசிரியர்களாகிய புலவர்கள் மனம் ஒன்றிச் சேரும் சங்கத்தில் கலந்து கூடி அவரோடு தமிழின்பத்தை நுகர்ந்த புகழ் நிரம்பிய சிறப்பை உடையவன்’ என்று புலவர் பாராட்டுகிறர். ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/50&oldid=1285986" இலிருந்து மீள்விக்கப்பட்டது