பக்கம்:கன்னித் தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கன்னித் தமிழ்


சொல்லும் ஒலிதான். அந்த ஒலிக்கு ஓர் உருவம் உண்டு. முதலில் நாம் அந்த ஒலியைத் தான் கேட்கிருேம். அந்த ஒலியைக் காது கேட்ட வுடன் அறிவு அதன் பொருளை ஆராய்கிறது. இன்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்கிருேம். சொல்லின் ஒலி காதில் விழுந்த மறுகணமே அதன் அர்த்தம் நமக்குத் தெரிகிறது. அதிகப் பழக்கத்தினுல் சொல் லின் ஒலியும் பொருளும் ஒரே சமயத்தில் தோன்று வதாகத் தெரிகின்றன. உண்மையில் ஒலிதான் முத லில் தெளிவாகிறது. பிறகுதான் அதைப் பொரு ளோடு சேர்த்துப் பார்க்கிருேம்.

இந்த விஷயத்தை நமக்குத் தெரிந்த மொழி , மூலம் அறிவது கடினம். நமக்குத் தெரியாத மொழி மூலம் இந்த அமைப்பை உணரலாம். யாரோ ஒரு வன் பஞ்சாபியில் பேசுகிருன். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன. ஆளுல் அவை காதளவிலே நின்று விடுகின்றன. மூளையில் ஏறுவதில்லை. அது முதல் வாசலிலேயே நின்று போகிறது. ஆனல் பஞ்சாபி தெரிந்த ஒருவருக்கு அது வெகு வேகமாக இரண்டாவது கட்டத்துக்குப் போய் விடுகிறது. அந்த ஒலியின் பொருள் அவருக்குப் புலப்படுகிறது. இந்த இரண்டும் வெகு வேகமாக நடப்பதனுல் சப்தத்தைக் கேட்பது அவ்வளவாகக் கவனத்துக்கு வருவதில்லை. ஏதாவது பாட்டில் புரி யாத வார்த்தை ஒன்று வந்து அதற்கு வாத்தியார் அர்த்தம் கேட்டுவிட்டால் பையன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறீர் கள்ா? அப்போது அவனுக்கு அந்தச் சொல்லின் ஒலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/54&oldid=1285987" இலிருந்து மீள்விக்கப்பட்டது