பக்கம்:கன்னித் தமிழ்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கன்னித் தமிழ

காப்பியத்தைக் கொண்டு அக் காலத்தில் வழங்கிய வழக்கைத் தெரிந்து கொள்கிருேம். இன்னும் பெரும் பாலும் அந்த வழக்கை யொட்டியே தமிழ் நிற்கிற தென்று தெரிகிறது. முன்னரே பண்பட்ட மொழி யாக இருப்பதால் தமிழ் திடீர் திடீரென்று மாறவில்லை. அன்று தொல்காப்பியர் காட்டிய இலக்கணங்களிற் பெரும் பகுதி இக்காலத்துத் தமிழுக்கும் பொருத்த மாக இருக்கிறது. -

இதல்ை, தமிழ் வளரவில்லை யென்பது கருத்தல்ல. புதிய மலரும் புதிய தளிரும் பொதுளித் தமிழ் புதுமையோடு விளங்குகிறது. அடி மரம் சேகேறிக் காலத்தால் அலைக்கப்படாமல் நிற்கிறது. அதனுல் தான் இதனைக் கன்னித் தமிழ் என்று புலவர்கள் பாராட்டு கிறார்கள். இந்தக் கன்னி மிகப் பழையவள்; ஆன லும் மிகப் புதியவள். இவளுடைய இலக்கணத்தைச் சொல்லும் தொல்காப்பியம் பழைய நூல்; ஆனல் புதிய காலத்திற்கும் பொருத்தமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/68&oldid=613341" இலிருந்து மீள்விக்கப்பட்டது