பக்கம்:கன்னித் தமிழ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் வகை ? Í

ஒரு டெக்னிக் வேண்டுமென்று எழுத்தாளர் சொல் வதைக் கேட்பார்கள்.

சிறு கதையின் இலக்கணத்தைத்தான் அதற்குரிய டெக்னிக்’ என்று சொல்கிறார்கள். உத்தி’ என்று தமிழில் அதை இப்போது வழங்குகிறார்கள். ‘ சிறு கதை நன்றாக இருக்கிறது’ என்று ரசிக்கும்போது அதனுடைய உத்தியை அவ்வளவாக நினைப்பது, இல்லை. அது நன்றாக இல்லை என்ற கருத்து வரும் போதுதான், ‘ஏன்?’ என்ற கேள்வி எழுகின்றது. அதன் பிறகு, “உத்தி இல்லை” என்ற சமாதானம் தோன்றுகிறது.

இப்படியே இலக்கிய வகைகளில் அறிவினுல் அநுபவிப்பதற்குரிய ஒவ்வொன்றிலும் அந்த அது பவத்துக்குக் காரணமான உத்தி அமைந்திருக்கிறது. காவியமாக இருந்தால் அதன் உத்தியை எடுத்துச் சொல்வதை, காவிய விமரிசனம்’ அல்லது ‘அலங்கார சாஸ்திரம் ‘ என்று சொல்கிருேம். செய்யுளாக இருந் தால், யாப்பிலக்கணம் என்று சொல்கிருேம்.

பொருள் ஒன்று இருந்தால் அதனைப் பிற பொருள்களினின்றும் வேறு பிரித்து அறிவதற்குரிய சில பண்புகள் அதற்கு இருக்கும். அந்தப் பண்பைக் குணம் என்றும் பண்பையுடைய பொருளைக் குணி என் றும் வட மொழியில் கூறுவர். மொழி என்னும் பொருளுக்கும் குணம் உண்டு. அந்தக் குணத்துக்குத் தான் இலக்கணம் என்று பெயர்.

குணியும் குணமும் தனித்தனியே பிரிந்து இருப்ப தில்லை. ஆனலும் பேச்சு நிலையில் குணி இது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/79&oldid=613379" இலிருந்து மீள்விக்கப்பட்டது