பக்கம்:கன்னித் தமிழ்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கன்னித் தமிழ்

தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத் துக்கும் சிவஞான முனிவர் மிக விரிவாக உரையெழுதி யிருக்கிறார், எழுத்ததிகாரத்திற் சில சூத்திரங்களுக்குப் பல வருஷங்களுக்கு முன் இருந்த அரசஞ்சண்முகனுர் என்ற புலவர் உரை எழுதியுள்ளார்.

மொழியைப்பற்றிய தத்துவங்களைப் பிறமொழி : களோடு ஒப்பிட்டு ஆராயும் மொழிநூல் (பிலாலஜி) என்பது நம் நாட்டில் இல்லை. ஆங்கில அறிவினுல் வந்த நன்மைகளுள் மொழி நூலாராய்ச்சி ஒன்று. இலக்கண நூல்களை இயற்றினவர்கள் பரம்பரையாக வந்த மரபை வைத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ற சில மாற்றங்களைப் புகுத்தி நூல் செய்தார்கள். அந்த இலக்கணங்களில் சமாதானம் காணமுடியாத சில பகுதிகள் உண்டு. அவற்றை அப்படியப்படியே கொள் வதையன்றி வேறு வழி இல்லாமல் இருந்தது. ஆல்ை மொழி நூலாராய்ச்சியைக் கொண்டு பார்த்தால் அப்படி விளங்காத பகுதிகளுக்கும் வி ள க் க ம் காணலாம.

இப்போது மொழி நூலறிவு வாய்ந்த சில அறி ஞர்கள் தொல்காப்பியத்துக்கு உரை எழுதி வருகிறார் கள். தமிழிலக்கியத்தில் தேர்ந்த பயிற்சி, தமிழிலக் கணங்களில் ஆழ்ந்த அறிவு, தமிழ் நாட்டு வழக்கில் நல்ல அநுபவம், பிற மொழிகளில் வேண்டிய அள வுக்குப் பயிற்சி, மொழி நூலில் நுணுகிய ஆராய்ச்சிஇத்தனையும் படைத்தவர்கள் தொல்காப்பியத்துக்குப் புத்துரை வகுக்கப் புகுநதால, கண்டறியாதன கண்

டோம் என்று வியப்பதற்குரிய நிலை உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/86&oldid=1286001" இலிருந்து மீள்விக்கப்பட்டது