பக்கம்:கன்னித் தமிழ்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ்

தமிழ் இலக்கியச் சாலை

‘அவனைப் பார்: தானே எல்லாம் சம்பாதித்து இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிருன். ஒரு பத்து ஆண்டுக் காலத்துக்குள்ளே வீடென்ன, நில மென்ன, சொத்தென்ன, சுதந்தரமென்ன-எல்லாம் சம்பாதித்துக் கொண்டான். எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் அப்பாவிடம் ஐந்து ரூபாய் வேண்டு மென்று கெஞ்சிக் கேட்டு நின்றது. எல்லாம். அதிருஷ்டம் ஐயா அதிருஷ்டம்’

“அதிருஷ்டத்தை நான் நம்பமாட்டேன். அவ னுக்குப் பிழைக்கிற வழி தெரியும். பணம் சம்பாதித்துச் சேர்க்க வழி தெரியும். ஒவ்வொரு கணமும் எடுத்த காரியத்தைச் சாதிக்க என்ன செய்யவேண்டும் என்ற யோசனையிலே அவன் மூழ்கியிருந்தான். இடை விடாமல் உழைத்தான். அந்த உழைப்பினுடைய பலனை இப்போது அநுபவிக்கிருன்.’

இந்த மாதிரியாகப் புதுப் பணம் படைத்த செல்வ னைப்பற்றிப் பொது மக்கள் விமரிசனம் செய்வது நம் காதில் எத்தனையோ தடவை விழுந்திருக்கின்றது.

SAAAAAA ASASASA SAMeS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/9&oldid=613426" இலிருந்து மீள்விக்கப்பட்டது