பக்கம்:கன்னித் தமிழ்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணமும் சரித்திரமும் 85

ருக்கு முன்பு புலவர்கள் எழுத்தின் ஒலி எப்படி உண் டாகிறது என்பதை ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள்.

தொல்காப்பியர் கூறும் இலக்கணங்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டுக்கும் உரி யனவே. சில இடங்களில் உலக வழக்கில் இப்படி வரும் என்று வேறு பிரித்தும், செய்யுளில் இப்படி வரும் என்று தனியாகவும் சொல்கிறார்.

தமிழ் நாட்டில் வியாபாரம் நன்கு நடைபெற்ற காலம் அது. பண்டங்களை அளந்தும் எண்ணியும் நிறுத்தும் முகந்தும் வியாபாரம் செய்தார்கள். அதற் குரிய அளவுப் பெயர்களை எழுத்ததிகாரத்தில் காண லாம். பல மரங்களின் பெயர்களும் வருகின்றன. இயற்கை வளம் மிகுந்த இடத்தில் வாழ்ந்த தமிழருக்கு அந்த இயற்கையிலே அமைந்த மரங்கள் பலபல திறத் தில் பயன்பட்டன. அவர்களுடைய வாழ்க்கையில் பயன்பட்ட மரங்களைப்பற்றி அவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டார்கள். பேச்சு வழக்கிலே வரும்போது சொற்களின் உருவத்தில் சில வேறுபாடுகள் தோன் :றின. அவற்றைத் தொல்காப்பியர் கவனித்தார்;

இலக்கணம் செய்தார்.

மாடு என்ற பொருளும் அதைக் குறிக்கும் சொல் லும் இருக்கின்றன. கால் என்ற அவயமும் அதைக் குறிக்கும் அச்சொல்லும் இருக்கின்றன. மாடு என்ற சொல்லோடு கால் என்பது சேருமானுல், அவை அப்படியப்படியே சேர்ந்து நிற்பதில்லை. மாடு கால் என்றால் ஒட்டியதாகவே தெரியவில்லை. மாட்டுக்கால் என்று சொன்னுல்தான் மாடும் காலும் இணைந்தவை என்று தெரியவரும். மாடு, கால் என்பவற்றைப் பேச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/93&oldid=613436" இலிருந்து மீள்விக்கப்பட்டது