பக்கம்:கன்னித் தமிழ்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கன்னித் தமிழ்


வழக்கிலும் மாட்டுக்கால் என்றே இணைத்துப் பேசு கிருேம். புதிதாகத் தோன்றிய ட், க் என்ற எழுத்துக் கள் இலக்கணம் படித்தவர்கள் பேச்சில் மாத்திரம் வந்தால் இது இலக்கணத்தைக் கற்றுப் பேசுகிறது என்று சொல்லலாம். தமிழர் யாரானலும் மாட்டுக்கால் என்றே சொல்வார்கள். மாடு, கால் என்ற இரண்டும் சேர்ந்து வழங்கும்போது, ட் என்ற எழுத்தும் க் என்ற எழுத்தும் தோற்றும் என்று இலக்கணக்காரர் சொன்னது, முன்பே இருப்பதைச் சுட்டிக் காட்டியதே யன்றி, புதிதாக இனி இப்படி இருக்கவேண்டும் என்று விதித்தது அல்ல. ‘ கடல் நீல நிறம் உடையது ‘ என்று ஒருவன் சொன்னல், கடலில் நீல நிறத்தை அவன் புதிதாக உண்டாக்கி விடவில்லை. கடலில் நீல நிறம் இருப்பதைத் தனியே சிந்திக்காமல் இருந்த வருக்கு, முன்பே உள்ள அதைச் சொல்கிருன். அவ் வளவுதான்.

எழுத்ததிகாரத்தைப் போலவே சொல்லதிகாரத் திலும் பொருளதிகாரத்திலும் உள்ள சூத்திரங்களும் இலக்கணச் செய்திகளை நன்றாகச் சொல்கின்றன. அவற்றில் தமிழர் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் சரித்திரத் துணுக்குகளும் இருக்கின்றன.

தொல்காப்பியர் வீட்டிலும், நாட்டிலும், கடையி லும், சபையிலும், வயலிலும், வாசலிலும் வழங்கிய தமிழைக் கண்டார். அதில் ஏற்படும் விசித்திரங்களை, ‘இதோ பாருங்கள் ‘ என்று சுட்டிக் காட்டுகிறார். அப் படி அவர் காட்டுவனற்றில் சில நமக்கு விளங்கவில்லை. சில இப்போது மாறிவிட்டன. காரணம்: வாழ்க்கையில் உண்டான மாறுபாடுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/94&oldid=1286005" இலிருந்து மீள்விக்கப்பட்டது