பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்து தீயில் போட்டார். தீ வேகமாகப் பரவியது. உயர்ந்து வளர்ந்தது. குப்பைகள் சாம்பலாயின. அம்மா தீ எரிந்து கொண்டிருந்த இடத்திலிருந்து அப்பால், ஒரு பாறையில் கால்களிசண்டையும் மடக்கி குந்தியிருந்தார். பரந்த கடலை நிர்மலமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவைப் பார்த்து வயதை மதிப்பிடுவதாக இருந் தால் எழுபது முதல் எண்பது வரை கூறலாம். நரை விழுந்த குட்டையான மயிர்கள் காற்றில் அசைய பொக்கை வாயை மென்று கொண்டிருந்தார். சில சமயம் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பார். அம்மாவை ஒரு முறை பார்த்ததும் அவர் ஆன்மீக வாதி என்ருே தெய்வத் தன்மை பொருந்திய ஆன்மா என் ருே ஜீவன் முக்தி என்ருே யாரும் கண்டு பிடித்து விட முடியாது. யாரும் புரிய முடியாதது அந்தத் தோற்றம். மு ன் று குப்பைகள் சாம்பலாகிக் கொண்டிருந்தன. சீடர் இராஜேந்திரன் அம்மாவின் அருகில் வந்தார். மேலே இருந்த சட்டையைக் கழற்றினர். அம்மா தாம் இருந்த இடத்திலிருந்து சிறிது தள்ளிச் சென்ருர், அசையில் உள்ள ஆடையை அவிழ்த்து இராஜேந்திரனிடம் கொடுத்தார். மெல்ல நடத்து சென்று கடல் நீரில் இறங்கிளுர். திரு. இராஜேந்திரன் என்னிடம் சொன்னர் "அம்மா பதிவாக நீராடுகின்ற இடம் இதுதான்" என்று.