பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தார். வெளியே தள்ளப்பட்ட குடலை அதன் வயிற்றினுள் தள்ளிஞர் ; கிழிந்த வயிற்றுப் பகுதியை வைக்கோலால் தைத்தார். கந்தல் துணியொன் ருல் காயம் பட்ட இடத்தைக் கட்டினர். அவ்வளவு தான். நாய் பிழைத்துக் கொண்டது. இந்த நிகழ்ச்சியை, அருகே இருந்து பார்த்தவர்கள் பிறரிடம் சொல்லிச் சொல்லி அம்மா பொது மக்களின் பார்வைக்கு உரியவரா ஞர். இன்றுபோலவே பத்து ஆண்டுகளுக்கு முன்பும் சத் நிதித் தெருவில் திரிந்த மாயம்மா எது கேட்டாலும் கொடுக்க உணவு விடுதிகள் கிடையா. அம்மா கேட்டுக் கொடுத்தால் அன்று விற்பனை நல்ல நடக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது. அம்மா தம் கடையில் வந்து எதாவது கேட்க மாட் டார் கன என்று ஏங்கும் கடைக்காசர்கள் கூட உண்டு. இப்போது, எப்போதாவது சந்நிதிக் கடை வீதியில் அம்மா சென்று இட்ட லியோ வடையோ வாங்கித் தன்னு டன் வரும் நாய்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது உண்டு. இது அன் ருட திகழ்ச்சி அல்ல. அம்மாவிடம் பணம் வாங்கித் தொழில் நடத்திகுல் அது செழிக்கும் , லட்சாதிபதியாகலாம் என்ற நம்பிக்கை வில் பலர் அம்மாவிடம் கையேந்தி நிற்பார்கள், சிலர் அப்படிப் பணம் கிடைத்து தொழில் நடத்தி செல்வந்தரானதாகச் செய்திகளும் உண்டு. திருவனந்தபுரத்தில் ஒரு துணி வணிகர் தம் தொழி லில் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் அம்மாவிடம் வந்தார். அம்மா ஐந்து ரூபாய் அவருக்குக் கொடுத்தார். அவர் அதை வாங்கி மறுபடியும் தொழில் ஆரம்பித்தார். பின்னர் அவர் லட்சாதிபதியான