பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

章 இறுதியாக மாயி ஒரு சின்னஞ்சிறு பலகாரக் கடை யில் போய் உட்கார்ந்தார்கள். நான், பூரியும் டியும் எனக் கும் மாயிக்கும் இராசேந்திரனுக்கும் கொடுக்குமாறு கடைக் காரனிடம் சொன்னேன். மாயி தானும் சாப்பிட்டார்கள்; முப்பது வயதான இராசேந்திரனுக்கு வாயிலும் ஊட்டி ஞர்கள்; எனக்குக் கையிலும் கொடுத்தார்கள் அப்புறம் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு அவ்வப் பொழுது ஏதோ வடநாட்டு மொழிச் சொற்களை முணு முனுத்துக் கொண்டு எவ்வித மெய்பாடுமின்றி மெய்யா கவே உட்காத் திருந்தார்கள். நானும் சிந்தனைக் கடலில் மூழ்கினேன் ஆம், இருட்டி விட்டதால் கன்னியாகுமரி யிலுள்ள முக்கடலில் மூழ்க முடியாத நிலையில் கருத்துக் கடலில் மூழ்கி உண்மை முத்துக்கள் ஒன்றிரண்டையே னும் கான-கைப்பற்ற முயன்றேன். மேலும் மாயி கடலின் அருகில் இருக்கும்போது மற்ற மாயக் கடல் எதற்கு ? மாயியின் மர்மம் என்ன ? குறைந்தது எண்பது வயது ஆகியிருக்கக் கூடிய - இதை முகத் தோற்றத்தாலேயே காட்டக் கூடிய இந்த அருளாளர் அம்மையார் என் இப்படி இருக்கிருர்கள் ? இவர்கள் பிறந்து வளர்ந்த ஊரோடு இவர்களுக்குத் தொடர்பு அற்றுப்போனது ஏன்? தொடர்புகளைத் துண்டித்த நிலையில் இவர்கள் தமிழ்நாட் டில் தென் மாவட்டங்களில் இரண்டு மூன்று இடங்களில் முப்பது நாற்பது ஆண்டுகட்கு முன்பே இருந்ததாகச் சொல்கிருர்களே! உண்மையா? இவர்கள் வாழ்வின் நோக் கும் போக்கும் இரகசியங்களும் யாவை? இவர் தம் போக் குகளைக் கொண்டு இவர் தம் நோக்கை நோக்க முடியுமா? இளமை முதல்-பதினெட்டு வயது முதல் இவ்வகையில் தீவி சமாக யான் கண்டும் கேட்டும் உணர்ந்திருக்கும் செய் திகள் ஒன்றன் பின் ஒன்ருக நான் பயன்படட்டுமா ? நான் பயன்படட்டுமா ? என்று என்னைப் பார்த்து நகைத் துக் கொண்டே நல்வரவு தந்தன. முப்பத்தைந்து ஆண் டுகளாக முற்றிவரும் அறிவுக் கருவி கொண்டு அற்புதங்