பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15

மகிழ்ச்சி; உணவு வகைகளை சுவையாகச் செய்து அவற்றை இரையாக மதித்து உண்டு களிப்பது, இவை தீமைகளே என்று உணர்.

எங்கும், எப்போதும், எவரிடமும் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் அவ்வாறு நடந்து காட்டியே வாழ்ந்தார்கள். நாமும் அப்படித் தானே நடக்க வேண்டும்? இது உலகியல்.

அதிகமாக வாத்தைகளைக் கொட்டாதே; அதிகப்படியான குற்றங்களை அது உருவாக்கி விடும்! அது போலவே ஒரே நேரத்தில் பல காரியங்களில் மூக்கை நுழைக்காதே. சூழ்நிலை இடையூறுகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்.

உன்னையே நீ தன்னடக்கத்தோடு உணர்ந்து பார். அழகு எனும் தத்துவச் சட்டத் திட்டங்களுக்குள் அடங்கி நட; அப்பொழுதுதான், நீ உன்னுடைய வாழ்வில் சில நெறிகளைக் காண்பாய் அல்லது உணர்வாய்!

நெறியுடன் நீ வாழ விரும்புகிறாயா? பசியைத் தணித்துக் கொள்; உனது வீட்டில் சுகபோக உணர்வுகள் இல்லாமல் இரு, எக்காரியத்தையும் உண்மையோடும், நேர்மையோடும் செய். நாவடக்கமாய் இரு நல்ல சீரான கொள்கைகளைக் கடைப்பிடி; நல்ல இலட்சியமுள்ளவர்களது நட்பை நாடு; அவர்களது நடத்தைகளின் அடிச்சுவடுகள் மீதுநட, இப்படிப்பட்டவன் யார் தெரியுமா? சகலகலாவல்லமை அறியும் ஆர்வலனாவான்.

பணம், புகழ்-மக்களால் விரும்பப்படுபவை. அதற்காக அவற்றை அடைய தவறான வழிகளில் நடக்காதே. வெறுத்து ஒதுக்கு. அதுபோலவே, ஏழ்மை, தாழ்மை நிலை-மக்களால் விரும்பப்படுவனவல்ல; இவை சரியான வழியில் கிடைக்கவில்லை என்றால், ஒதுக்கி விடாதே இவற்றை