பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

25

தின் தத்துவத்திற்கும், குறிப்பாக, கன்பூசியசின் தத்துவத்திற்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேற்கு நாட்டுத் தத்துவம், அறிவியலோடும்-மதத்தோடும் சார்புடையது; அறிவை அறிவிற்கே அடையும் லட்சியமுள்ளது; வரம்பற்றது அறிவு என-நம்பும் நம்பிக்கை உடையது.

ஆனால், சீன நாட்டு தத்துவமோ, அறச் சார்புடன் உறவாடுவது; அரசியல், இலக்கியம், கலைகளோடு நெருக்கமுடையது. அறிவுக்கு வரம்புண்டு என்று வரையறுக்கும் சிந்தனை பெற்றது.

நற்செயல்களுக்காகவும், சாதனைகளுக்காவும் அறிவை ஓர் துணைக் கருவியாக உபயோகப்படுத்த எண்ணுவது; மனிதனின் விஞ்ஞானச் சக்திகளையும் மீறி; அவனது ஒழுக்கப் பண்புகளையே பெரிதாக வளர்ப்பது; தன்னைப் பண்படுத்தும் தத்துவத்திற்கே முதலிடம் தருவது மனிதத் தன்மை, அன்பு வழி, அறநெறி, சமூக உறவுகள், கடமைகள், ஒழுக்க விதிகள் போன்றவற்றில் ஈடுபடும் தன்மையுடையது.

உலகின் தத்துவங்களை; அதாவது எதிரிடை இரட்டைகளாகப் பார்ப்பது மேனாட்டுத் தத்துவம்! குறிப்பாக, கிரேக்க நாட்டு மேதை பிதாகொரஸ் என்பவன் அதைச் செய்தான்-பேசினான்!

’எதுவும் இரண்டல்ல; ஒன்றுதான்’ என்ற பிதாகொரசை எதிர்த்து எதிர்வாதம் புரிந்தான்-அதே கிரேக்க நாட்டின் பேரறிவாளன் ஹெராக்ளிட்டஸ் என்பவன்!

’காலம் நிலையான ஒன்றல்ல’ என்பதாலும், மாறுதல் என்பது இயற்கையின் நியதி' என்ற கருத்து மோதல்

க-2