பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47


ஜீன் கொள்கையின் பெற்றோர் பக்தி, சகோதர அன்பு என்னும் கன்பூசியசின் இரு கருத்துக்களையும் ஆராய்ந்தால், அவற்றின் விரிவுக் கருத்துக்கள் முழுமையாக விளங்கும்.

வீட்டில் இருக்கும்போது ஒரு வாலிபன் பெற்றோர் பக்தியோடும், வெளியே பழகும்போது அதே வாலிபன் மற்றவர்களிடம் உடன்பிறந்த சகோதரப் பக்தியோடும் பழகப் பயில வேண்டும்.

மனப்பூர்வமாக அவன் எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று கூறிய கன்பூசியஸ்; இந்த இரண்டு பண்புகளையும், மனித உணர்வுகளையும் சமுதாய அமைப்பிற்கு அடிப்படையாக இருக்கவேண்டும் என்று விளக்குகிறார்.

அதே சமயத்தில் அந்த வாலிபனுக்கு விசுவாசமும், பரோபகாரமும் தேவை என்கிறார். விசுவாசம் அவனுக்கு பிறரிடம் முழுமனதுடனான நேர்மையினையும், பரோபகாரம் வெளியுலகில் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ளும் மனோநிலையினையும் அவனுக்கு உருவாக்கும் என்கிறார்.

"ஜீன் வழி மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது, அவன் மற்றவர்களையும் வளர்க்கும் மனநிலையை பெறுவான் என்றும், அந்தக் கொள்கையுடையவன் நல்ல குடிமகனாகவும், நல்ல ஆட்சியாளனாகவும், நல்ல தந்தையாகவும், நல்ல தாயாகவும், நல்ல பிள்ளையாகவும், நல்ல, கணவனாகவும் நடந்த கொள்ளும் நல்ல பழக்கங்களையும் பெறுவான் என்று கூறுகிறார்.

இப்படிப்படிப்பட்ட ஜீன் ஒழுக்கங்கள், சீனர்களின் பண்பாட்டை வளர்ப்பதற்கும், தேசிய வாழ்க்கைக்கும், மூலாம்சமாக மாறின. நீதி நேர்மை, பொறுமை, மற்றவர்