பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கன்பூசியஸின்

களோடு பழகும் உறவுமுறை, அன்பு, ஆகியவற்றை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்ற மனநிலைகளை வழங்குகின்றன. இதனால், இந்த ஜீன் தத்துவத்தின் போதனைகள் உலகெங்கும் தலைதூக்கி இன்று மக்களின் போற்றுதலைப் பெற்றுள்ளன எனலாம்.

கன்பூசிஸ் இந்த தத்துவங்களின் அருமையை நன்கு புரிந்துகொண்டதால்தான், இவற்றைத் திரும்பத் திரும்ப உலகுக்கு உபதேசம் செய்தார். ஒருவன் தன்னுடைய சுற்றுச் சார்பு நிலைகளுக்கு உகந்தவாறு அவன் தனது செயல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வலியுறுத்துகிறார்.

மனிதன் உயிரிகள் மீது அன்பு காட்டுவது மனிதப் பண்பு; ஆனால், மனிதர்களைப் புரிந்து கொள்வது அறிவியல் என்றும் தீர்க்க தரிசனமாகக் கூறுகிறார்.

மனிதனுக்கும்-ஓர் அரசுக்கும், இவை அனைத்திற்கும் மேலே ஒரு சக்தி உள்ளது. அதுதான் சுவர்க்கம் அல்லது வானகம் என்றும் சொல்கிறார்.

வானகம் என்று அவர் கூறுகிறாரே, அது என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு அவரே பதிலளிக்கும்போது; 'வானகம் என்பது உன்னதமான ஓர் ஆத்மீக இயக்கம். அது இயற்கையின் சக்தியே தவிர, இறைவன் எனப்படும் ஓர் ஆளல்ல என்றும் அதைத்தெளிவுபடுத்தி அடையாளம் காட்டுகின்றார்.

'வானகம்', ஒளியை வழங்குகிறது. அதனைப்போல ஒளியூட்டும் லட்சியங்கள்-நம்மை, நமது மனத்தைப் புதுப்பிக்கவும், மனித சமுதாயம் முழுவதும் அந்த ஒளியால் சிறப்பான நன்மைகளைப் பெறவும் உதவுகின்றது என்றும் இந்த ஞானி அறிவிக்கின்றார்.