பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57

குக் கலவரம், ஒழுங்கின்மைகளை அகற்றவே என் வாழ் நாட்களைச் செலவழித்தேன்' என்று மக்கள் படும் துன்ப, துயர வேதனைகளுக்காக மெழுகுவத்தியைப் போல அவர்களுடன் இணைந்து வாழ்ந்து உருகி அழிந்தவர் கன்பூசியஸ் என்ற மனிதநேயாபிமான மகான்

இயேசு பெருமான் தோன்றுவதற்கு 550 ஆண்டுகளுக்கு முன்னர், சீன நாட்டின் வடகிழக்கில் 'ஷன்துங்' என்று இப்போது வழங்கப்படும் ஒரு மலைப்பிரதேசத்தில், 'லூ' என்ற மன்னனது ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த 'ட்சூப்வு' என்ற நகரில், 'சூ-லியாங்-கே என்ற ஓர் அதிகாரிக்கும்- சிங்-ட்சாய் என்ற பெண்ணுக்கும் மகனாக, ஒரு பிரபு குடும்பத்திலே கி.மு. 530-ஆம் ஆண்டில் பிறந்தவர், ஞான மகான் கன்பூசியஸ். இவரை "குங்-பப்யூ-ட்ஸெ என்ற பெயராலும் அழைப்பது உண்டு.

கன்பூசியஸ் சாதாரண ஒரு குடும்பத்திலே பிறந்தாலும் அவரது பரம்பரை 'சுங்' என்ற வம்சத்தைச் சேர்ந்தது என்பது அவரைப்பற்றிக் கூறப்படும் விவரமாகும்.

கன்பூசியஸ் தந்தை நெஞ்சுரமிக்க ஒரு வீரர்; அரசின் அதிகாரி; அவரது முதல் மனைவி பெற்றதெல்லாம் பெண்கள்; அதனால், ஆண் குழந்தை ஒன்று தேவை-வம்ச வளர்ச்சிக்காக என்று எண்ணித் தனது 70-ம் வயதில் 17வயதுடைய ஒருபெண்ணை அவர் மணந்து கொண்டார்.

பாலைவனத்து மணல் திட்டுக்களிலே 'ஓயெசஸ்' என்ற பசுஞ்சோலை ஒன்று தென்பட்டதைப் போல, அவருக்கு ஓர் ஆண் குழந்தை அடுத்த ஆண்டே பிறந்தது!

பாலைவனமும் பசுஞ்சோலையும் சேர்ந்து பெற்றெடுத்தக் குழந்தை; அதாவது 70-ம்-17-ம் சேர்ந்து பெற்-

க-4