பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கன்பூசியஸின்

றெடுத்த பேரழகுக் குழந்தை; இளமையும் முதுமையும் இணைத்து ஈன்றெடுத்தக் குழந்தை என்பதனாலோ என்னவோ-கன்பூசியசின் இளமையிலே 'ஞானப்பூ' பூத்தது. தனது தாயின் வயதுப் பண்புக்கு ஏற்றவாறு அந்த ஞானத்துக்குரிய ஞானச் சுவையைப் பிழிந்து கொடுத்தது எனலாம்.

இதற்குரிய காரணம், பாலைவனத்தின் வெட்கமும் பசுஞ்சோலையின் தட்பமும்-பருவ - ஞான எழுச்சிகளின் உணர்ச்சிகளும்தான், கன்சிபூசியஸ் என்ற கரு உருமூலமாக அறிவுப் புரட்சி உருவாக்கிய காலத்தின் கட்டாய அருமைச் சம்பவமாகும்.

கன்பூசியஸ் இளமையிலேயே வறுமைக் கடலிலே ஆழம் அனுபவித்தவர்; காரணம் தந்தையார் இறப்பும்; தாயார் வருவாய் போதாமையும்தான்!

நம் நாட்டுக் குழந்தைகள் சிறு பருவத்திலே கூடி மகிழ்த்து அம்மா அப்பா பொம்மை வைத்து விளையாடும் வழக்கத்தை நாமும் பார்த்துள்ளோம். ஆனால், சிறுவன் கன்பூசியஸ் தனது ஆறாம் வயதிலேயே மற்ற சிறுவர்களைக் கூட்டித் தெய்வங்களுக்கு பூசை செய்து ஞான விளையாட்டுக்களை ஆடுவாராம்!

கன்பூசியஸ் இளமையிலேயே காதலாட்டம் ஆடியவர். கல்வித் துறையில் பதினைந்தாவது வயதில் எப்படியாவது தான் ஞானிவாகி விட வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கான பழங்கால நூல்கனையும், பண்பாடுகளையும், மற்ற வரலாறுகளையும், வானவியல் கலைகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் படித்து முதிர்ந்த ஞானம் பெற்றவரானார்!

அவரே ஓரிடத்தில் இதைக் கூறும்போது, என்னுடைய இளம் வயதில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கி