பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67


தனது மாணவர்கள் மனதிலே அவர் கருத்து விதைகளை விதைத்தார். அந்த வித்துக்கள் இந்த நாட்டுக்குரிய எதிர்கால அறுவடையினையாவது வழங்காதா என்ற ஏக்கத்துடன், ஒருவித மனத் திருப்தியுடன் ஊர் ஊராக அவர் அலைந்தார். இதுதான் கன்பூசியஸ் மகானின் அன்றைய வாழ்க்கை அவலம்.

வெறும் ஞானம் போதிக்கும் ஜைன ஞானி மகா வீரரைப் போலவோ, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த போதி மாதவன் புத்தரைக் போலவோ, இவருடைய நாட்டிலேயே அவர் காலத்தில் இருந்த ஞானி 'ஓட்சே'வைப் போலவோ கன்பூசியஸ் வாழ்ந்தவர் அல்லர்!

கன்பூசியஸ் ஒரு யதார்த்தவாதி; தத்துவ ஞானி மட்டுமல்ல அவர்; எதையும் எண்ணியபடி செய்துகாட்டவேண்டும் என்ற ஒரு செயல் ஞானி; ஒரு நாடு நல்ல நிலையில் வளமாக வாழக்கூடிய அடிப்படை அம்சங்களான அரசு நிர்வாகம், சமூகச் சீரமைப்பு, அரசியல் சட்டம், ராணுவ தந்திரம், குடும்ப வாழ்வு, பொது ஒழுக்கம், உலக சமுதாயம், தனிமனித ஒழுக்கங்கள் அனைத்தையும் உருவாக்கவல்ல ஒரு பேரறிவாளர்; அவற்றைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக் கூடிய அறிவு பலம் வாய்ந்தவர்; செயலிலே செய்து காட்டும் எல்லா வகைத் திறமைகளும் உடையவர்; அவர் கதி-அப்போது அப்படி! பாவம்; பாவம்!

அத்தகைய ஓர் அற்புத மகானை யார் அரசியல் குருவாக ஏற்கவல்லார்? இந்த நிலையில் எல்லாம் இழத்த கன்பூசியஸ், தனது மாணவர்களோடு 'வெல்' என்ற நாட்டை அடைந்தார்! அங்கிருந்தும் பொறாமைக்காரர்களால் விரட்டப்பட்டார்!

விரட்டப்பட்ட அவர், ஒரு மலைப்பாதை வழியாக மாணவர்களுடன் கால்கடுக்க நடந்து கொண்டிருந்த போது தங்களுக்குக் கேடுகள் பல செய்த 'யாங்யூ' என்று