பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கன்பூசியஸின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. காற்றும் புல்லும்!

அய்யன் திருவள்ளுவர் பெருமானுக்குப் பிறகு, சீன நாட்டில் அவரது அறநெறி வழிகள் சார்பாக, உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும், பொது மனிதனாகவும், தோன்றிய துறைகளிலே எல்லாம் புகழொடு தோன்றி, மனிதகுலம் வாழ்வது எப்படி என்று சிந்தித்து வழிகாட்டி மறைந்த ஒரு மாபெரும் ஞானி கன்பூசியஸ் என்ற ஞானியர் திலகம்!

திருவள்ளுவர் பெருமானுக்குப் பிறகு அந்த ஞானப் பெருமகன் பிறந்தார் என்று நாம் எழுதுகின்ற போது, இதன் ஆராய்ச்சியைக் கூறுவதானால், நூல் பெருகும் திறனாய்வாகத் திகழும் என்பதால், நாம் ஆய்வு உலகத்துக்குள் புக விரும்பவில்லை. அதற்கு ஒரு தனி நூலே எழுத வேண்டிய நிலை தோன்றும்.

ஆனாலும், கன்பூசியஸ் என்ற சீன நாட்டு ஞானி, திருவள்ளுவர் பெருமானைப் போலவே ஓர் அறநெறியாளராக வாழ்ந்தார்.

அவர் அறநெறி ஆசானாக மட்டுமே வாழ்ந்து காட்டியவர் அல்லர்; சிறப்பான ஓர் அரசை அமைத்து காட்டுவதற்குரிய ராஜ தந்திரியாகவும் நடமாடினார். அதற்கான அனுபவமும் உள்ளவராகப் பணியாற்றிக் காட்டிய முன்