பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கன்பூசியஸின்

படைகளை அனுப்பி அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பகுதி வறண்ட பகுதி, அதனால் படைகளில் பலர் பட்டினி கிடந்தார்கள். கன்பூசியஸ் மாணவர்களில் சிலரும் நோய்வாய்ப்பட்டார்கள்.

இக்கட்டான அந்த நேரத்தில், கன்பூசியஸ் அமைதியோடு சங்கீதம் பாடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த தேரத்தில், நாம் சிக்கிக்கொண்டது இயல்புதானா? என்றான்.

உடனே கன்பூசியஸ், "இயல்புதான்! ஆனால், அந்தச் சமயத்தில்தான் அவன் மிகுந்த பொறுமையோடும், அமைதியான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். அற்பனைப்போல முட்டாளாகக்கூடாது; அற்பமான செயல்களைச் செய்யக்கூடாது" என்றார். இந்த வார்த்தைகள் சில மாணவர்களின் மனதைக் கவர்ந்தன.

கூர்ந்து அதைக் கவனித்த கன்பூசியஸ், "எல்லா விஷயங்களையும் நான் எனது நினைவில் வைத்திருக்கிறேன். அந்த நினைவிற்காகவே பல விவரங்களை நான் கற்றுள்ளேன் என்றும் எண்ணுகிறாயா நீ?" என்று ஆவர் கேட்டதற்கு, மாணவன் 'ஆம்' என்றான்.

இதைச் சிந்தித்த கன்பூசியஸ், நமது மாணவர்கள் நமது மாணவர்கள் நம் மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதைக் கண்ட அவர், அவர்களது மனத்தை ஆராய விரும்பினார், உடனே தனது மாணவன் ‘ட்சூலு'வை அழைத்து, நாம் இந்த காட்டில் உலாவரும் புலிகளா? காண்டா மிருகங்களா? நான்கூறும் தத்துவங்கள் பொய்களா? நாம் இந்தச் சூழ்நிலையில் ஏன் கஷ்டப்படுகிறோம்? காரணம் என்ன? என்று பொறுமையாகக் கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்; "பொது மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் எதைக் கூறினோம்? என்ன காரியம் அதற்காகச் செய்தோம்? நமது தத்துவங்கள் மக்கள் மனதைக் கவரவில்லை; நாம் அவர்களுக்குக் காட்டும்