பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73

மனதை அவர்களால் பின்பற்றமுடியாதவை; பொருத்தமற்றவை என்று நினைக்கிறேன்" என்றான்.

'உண்மைதான் உண்மையான தத்துவங்கள் மக்கள் மனதைக் கவர்வது கஷ்டம்தான்' என்றார் கன்பூசியஸ் பிறகு, அடுத்த சீடனை அழைத்து, நாம் என்ன புலிகளா? காண்டாமிருகங்களா? கானகத்தில் நடமாடி நமது நாட்களை நகர்த்திட இந்தச் சூழ்நிலையில் நாம் இங்கே இருப்பதற்கு என்ன காரணம் என்று அவர் கேட்டார்.

'தங்களுடைய கருத்துக்கள் மக்கள் பின்பற்றக் கூடிய அளவுக்குச் சுலபமாக்கப்பட வேண்டும்' என்று அந்த மாணவன் பதில் கூறினான். அப்போது அவனுக்குப் பதில் கூறும்போது கன்பூசியஸ்; உழுது விதை விதைக்கும் நேரத்தில் அறுவடையின் பயன் எப்படி இருக்கும் என்று உழவனால் கூறமுடியாது.

கலைநுட்பமும் செறிந்த ஒரு பொருளை உருவாக்கும் கலைஞன், அந்தப் பொருள் மக்களைக் கவர்ந்து விடமுடியும் என்று கணக்கும் போடுவது வெறும் கனவே.

உன்னைப் போன்றவர்கள் தன்னைப் பண்படுத்திக் கொள்வதில் தனது அக்கறையைச் செலுத்தாமல் மக்களின் மனதை எவ்வாறு கவரமுடியும் என்ற நோக்கத்திலேயே மூழ்கிப் போய் விடுகிறார்கள்.

உன்னைப் போன்றவர்கள் தனக்குத்தானே அமைத்து கொள்ளும் முடிவு சரியானதல்ல என்று கன்பூசியஸ் சற்றுக் கடுமையாகவே பதில் கூறினார்.

மற்றொகு சீடனை அழைத்து பேசும்போது புலிகள், காண்ட மிருகங்களைப் போல நாம் ஏன் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறோம்! இந்த நிலைக்குக் காரணம் யார்? என்றார்.

க-5