பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கன்பூசியஸின்

மானால் மக்கள் இடையே குழப்பங்கள், சூழ்ச்சிகள், கலகங்கள், கொலை, திருட்டுப் புரட்டுக்கள் எல்லாம் உருவாகி, அந்த நாட்டின் நல்வாழ்வே நாசமாகி விடும்.

இதனால் நாட்டின் நிர்வாகத்தில் நேர்மை, நீதி நிலைக்காது; அறம் கெடும்; அதனால் நேர்மையான மனிதன் எந்த நேரத்திலும் எதற்கும் சரியான சொற்களை, பதங்களை, சொற்கோவை வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது என்று கன்பூசியஸ் கூறிய பதிலைக் கேட்டு மாணவன் திகைத்து விட்டான்!

இப்போது மகான் கன்பூசியசுக்கு வயோதிகம் ஆட்கொண்டு விட்டது; இறுதிக் காலமும் நெருங்கி வந்துவிட்டது. மனமுடைந்த ஞானப்பழமாய் தனது 63-ம் வயதிலே தனது சொந்த ஊரான 'லூ' அரசு மண்ணுக்கு வந்து சேர்த்தார்.

ஏறக்குறைய சீன நாட்டு மண்ணின் மூலை, மூடுக்குகளில் எல்லாம் பதினைந்து ஆண்டுகள் நாடோடி ஞானியாக அலைந்து திரிந்தார். இறுதிக் காலத்திலும் கூட, இவ்வளவு அறிவும், புகழும்-ஞானமும், சகலத் திறமையும், வல்லமையும் கொண்ட ஒரு பழுத்த ஞானியைப் பாராட்டி அவரது மண்கூட அவருக்கு மதிப்பளிக்கவில்லை, பாவம்! அவருடைய யோசனைகளைக் கூட கேட்க யாருமில்லை! ஆனால், சீனத்துப் பொதுமக்கள் மட்டும் அவரை வந்து பார்த்து உரையாடி மகிழ்வித்து, ஞானோபதேசம் பெற்றுப் போய்க் கொண்டிருத்தார்கள்.

கன்பூசியஸ் மீண்டும் குருகுல போதகர் ஆனார்! மாணவர்கள் எங்கெங்கோ இருந்து வந்து குவிந்தார்கள். அந்த சீடர்களின் தகுதி, தரத்துக் கேற்றவாறு அவர் அறிவாசானாக விளங்கினார்! அவர்களிடம் உரையாடியே தனது பொழுதைப் போக்கிக் கொண்டார்.

சமயக் கோட்பாடுகள், பழைய சரித்திர நூல்கள், இலக்கியங்கள், ஆசாரப் பண்பாடுகள் பற்றியெல்லாம்,