பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கன்பூசியஸின்


◯ நம்பிக்கைக்குப் புறம்பான புராண இதிகாசங்களில் காணப்பட்ட அதி வினோதமான செயல்களைப் பற்றி எப்போதும் பேசாதவர்.

◯ எதற்கும் அடங்காத அகம்பாவிகளின் அக்கிரமச் செயல்களைப் பற்றி, யாரிடமும் எப்போதும் பேசமாட்டார்.

◯ மதம்பற்றி அவர் பேசிய போதும் கடவுள் சிலை சிலைகள் முன்பு அவர் பயபக்தியோடு பணிந்து நின்றபோதும், தம்மால் மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ சரிவரப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றே திட்டவட்டமாகக் கூறினார்.

◯ அமைதியான முறையில், இதயப் பூர்வமாக கடவுளைத் தொழுவதையே ஆவர் விரும்பினார்.

◯ பாவச் செயல்களைப் புரிந்துவிட்டு, அவற்றுக்குப் பிராயசித்தம் தேடும் வகையில் பிரார்த்தனை செய்வது அவர் மிகவும் வெறுத்த விஷ்யமாகும்.

◯ தனது சொந்த ஊருக்கு கன்பூசியஸ் திரும்பி வந்து குருகுல-மாணவ வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த போது. அவரது மகன் 'பெயிபு' மரணமடைந்தார்! அவரது தலையாய மாணவர்களுள் ஒருவரான 'யென்யு யேய்' என்பவரும் இறந்துபோனார்.

◯ இந்த இரு பெரும் சாவுக் கொடுமைகளைக் கண்ட வயோதிக வளமேறிய ஞானி கன்பூசியஸ் பெருமூச்செறிந்தார்! 'இறைவா என்னை அழித்தி விட்டாயா? இறைவா என்னை அழித்து விட்டாயா!' என்று விம்மி விம்மி அழுதார்.

◯ தனது மாணவர் உயிர் பிரிந்தபோது, என்னுடைய இலட்சியப் பணியை என்னிடம் இருந்து பிரிந்து விட்டது. என்று அனல்பட்ட மெழுகு போல உருகினார்.

◯ உச்சிக் கொம்புடன் அமைந்த ஒரு காண்டாமிருகம் ஒன்றை அவர் பார்த்தபோது, அது கெட்ட சகுனத்தின் அறிகுறி என்று உணர்ந்தார்! அதனால், எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய அவர், எனது