பக்கம்:கபாடபுரம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கபாடபுரம்


எண்ணினர். அந்த வைகறையின் சுகமான சீதளக் காற்றில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் பூத்திருந்த புன்னைப் பூக்களின் நறுமணம் எல்லாம் கலந்து வீசியது. எங்கோ ஒரிரு காகங்கள் கரையத் தொடங்கியிருந்தன. அந்தக் காற்று, அதில் கலந்திருந்த புன்னைப் பூ வாசனை, எல்லாம் சேர்ந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. நகர் பரிசோதனைக்காகப் புறப்பட்ட மாறுகோலத்திலிருப்பதே தனக்கும் முடிநாகனுக்கும் அப்போது ஒரு நன்மையாயிருப்பதை இளைய பாண்டியன் உணர்ந்தான். முடிநாகனோடு அவன் புன்னைத் தோட்டத்திற்குள் புகுந்தபோது மெல்ல மெல்ல விடியத் தொடங்கியிருந்தது.


13. நெய்தற்பண்

புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு - தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து - யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற் பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது. கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஒர் ஒலி ஒற்றுமை இருக்கும்போலும். கவிகளின் சிந்தனையில் கடல் அலையொலி சோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியிருக்கிறது. குழலிசையிலும், கடலலையிலும், மாலை வானின் செக்கர் நிறவொளியிலும் உலகில் முதல் கவிஞனே சோகத்தைத்தான் கண்டிருக்க முடியும்போலிருக்கிறது. அதனால்தான் நெஞ்சின் சோகத்துக்கு எதிரொலிகளாக அமைய முடிந்தவற்றை வரிசைப்படுத்தும்போதெல்லாம் இவற்றையே ஒன்றுசேர்த்துத் தொகுத்து வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். சுவை, ஒளி, ஊ ஒசை, மணம் இவற்றிற்கும், மனிதனுடைய சிந்தனைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். ஒரு சுவையோடு உறவுகொள்ளும் போதுகளில் எல்லாம் முதன் முதலாக அந்தச் சுவையைக்கண்ட வேளையின் நினைவுகள் வருகின்றன. ஒர் ஒசை, ஒரு மணம், ஒர் உணர்வு, எல்லாமே அதன் முதல் அநுபவத்தைச் சார்ந்த முதல் நினைவுகளுடனேயே வருகின்றன.

புன்னை மரத் தோட்டத்தின் நறுமணம் அதே சூழ்நிலையில் அதே இடத்தில் முன்பு கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/100&oldid=490024" இலிருந்து மீள்விக்கப்பட்டது