பக்கம்:கபாடபுரம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

137


விவரிக்கத் தொடங்கியபோதுகூட இளைய பாண்டியன் அதில் தலையிடவில்லை. எல்லாம் பேசி முடிந்து ஊழியர்களுக்கு இடவேண்டிய கட்டளைகளையும் இட்டு முடித்தபின் முடிநாகன் தனியே நின்றுகொண்டிருந்த இளையபாண்டியனுக்கருகே நெருங்கி,

"எந்தத் திசையில் மரக்கலத்தைச் செலுத்தச் சொல்லியிருக்கிறேன்; தெரியுமா?" என்று வினாவியபோது

"எந்தத் திசையில் செலுத்திக் கொண்டுபோனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதே" என்று பூடகமாக மறுமொழி கிடைத்தது இளையபாண்டியனிடமிருந்து. அந்த மறுமொழியைக் கேட்டு முடிநாகன் ஒரளவு அதிர்ச்சியடைந்தான் என்றே சொல்லவேண்டும். மேலும் தொடர்ந்து இளையபாண்டியன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்து முடிநாகனுக்கு அவனுடைய தொடர்பான நீடித்த மெளனம் திகைப்பையே அளித்தது. அந்த மெளனத்தைத் தற்செயலான அமைதியாகவோ சோர்வாகவோ கருதி விட்டுவிடவும் முடிநாகனால் இயலவில்லை. ஏதோ பெரிய காரணம் இருக்கவேண்டுமென்றும் தோன்றியது. ஒரு காரணமும் தனியே பிரிந்து புலப்படவில்லை. அந்த நிலையில் இளையபாண்டியனின் அந்த மெளனத்தைக் கலைத்து உரையாடலை வளர்க்கவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. நீண்ட நேரம் அதே நிலைமை நீடித்தது. இளையபாண்டியனிடம் ஏதாவது பேசியாக வேண்டுமென்று முடிநாகனே வாய் திறந்தபோது சிறிதும் எதிர்பாராதவிதமாக இளையபாண்டியனே பேச முன்வந்தான்.

"முடிநாகா! நாம் இந்தத் தீவில் இன்னும் சிலநாட்கள் தங்கி நம்மோடு எயினர் தலைவன் சுபாவமாகப் பழகத் தொடங்கிய பின்பு கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்கும் ஆவலை வெளியிட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டோம். அவசரப்படாமல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதிலுள்ள நீடித்த செளகரியம் அவசரப்படுவதில் எப்போதுமே இருப்பதில்லை" என்று இளையபாண்டியன் கூறத்தொடங்கியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/139&oldid=490066" இலிருந்து மீள்விக்கப்பட்டது