பக்கம்:கபாடபுரம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கபாடபுரம்


மறுநாள் காலையிலும் விடிந்ததும் விடியாததுமாகப் பெரியபாண்டியரே அவர்களை எதிர்கொண்டு முதல் நாளிரவு அரைகுறையாக விட்ட உரையாடலைத் தொடரத் தொடங்கி விட்டார்.

"நேற்றிரவு புன்னைத் தோட்டத்திற்குச் செல்லுமுன் நீங்களிருவரும் ஏதோ அவுணர்வீதி முரசமேடைப் பக்கம் போயிருந்தாகக் கூறினர்களே. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எனக்குச் சிறிது தெளிவாகத் தெரியவேண்டும்."

இந்தக் கேள்விக்கு இளையபாண்டியனான சாரகுமாரன் மறுமொழி கூறத் தயங்கினான். அருகிலிருந்த முடிநாகன் சற்றே துணிவோடு விரிவாக மறுமொழி கூறலானான்.

"முரசமேடைக்குக் கீழே அவுணர்களின் இரகசியப் படைக்கலச்சாலை ஒன்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது" - என்பதாக ஏதோ பெரிய அந்தரங்கத்தைக் கண்டு பிடித்துச் சொல்பவன்போல முடிநாகன் கூறியும் பெரியவர் அதைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை.

"இருக்கலாம்; அப்புறம்?"

"அதன் மூலம்தான் இடையிடையே அவுணர்கள் கொலை, கொள்ளை, கலகங்களில், ஈடுபடவும் மறையவும், மீண்டும் வெளிவரவும் வாய்ப்புக்கள் இருப்பதாகத் தோன்றுகின்றன."

"தோன்றுவது நியாயம்தான்... மேலே என்ன...?" என்று திரும்பவும் அயராது கேட்டார் பெரியவர். முடிநாகன் அயர்ந்துபோனான். பெரியவர் தீர்மானமாகத் தங்களிருவரையும் சோதிக்கிறார் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. அவனும் பயந்து பேச்சிழந்து ஏற்கெனவே மெளனமாக நின்ற இளையபாண்டியரைப் போலானபின் பெரியவர் அவர்கள் இருவரருகிலும் நெருங்கிக் கம்பீரமாக நின்று கூறலானார்:

"ஒற்றன் வேறு; அரச குடும்பத்தினன் வேறு. ஒற்றன் அறிந்து கூறுவதைப் போன்ற சாதாரணப் புறச் செய்திகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/84&oldid=490007" இலிருந்து மீள்விக்கப்பட்டது