பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கபோதிபுரக்


னாள். “யார் நோய் குறையுமம்மா! அப்பாவுக்குள்ள பணநோய் குறையும் அந்தக் கிழவனுக்கு ஆத்திரம் குறையும்” என்று அலறிச் சொன்னாள் ராதா. பிறகு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது தனக்கு எங்கிருந்து இவவ்ளவு தைரியம் வந்தது என்று. நோய் தானாகப் போகும் கலியாணத்துக்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் என்று மாரியப்பபிள்ளை கூறிவிட்டார். நாள் வைத்துவிட்டார்கள். கலியாண நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு, உறவினருக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன கலியாணத்துக்கு. அந்த நேரத்தில்தான் மாரியப்பபிள்ளைக்கு, தனது பேரனுக்கு அழைப்பு அனுப்புவதா, வேண்டாமா என்ற யோசனை வந்தது. ஆகவே, தமது காரியஸ்தர் கருப்பையாவை அழைத்துக் கேட்டார்.

“ஏ! கருப்பையா! அந்தப் பயலுக்குக் கலியாணப் பத்திரிகை அனுப்பலாமா, வேண்டாமா?”

“யாருக்கு எஜமான்?” என்றான் கருப்பையா.

“அதாண்டா அந்தத் தறுதலை, பரந்தாமனுக்கு” என்றார் மாரியப்பிள்ளை.

“ஒண்ணு அனுப்பித்தான் வைக்கிறது. வரட்டுமே” என்று யோசனை சொன்னான் காரியஸ்தன்.

இந்தச் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமிபிள்ளை, மேற்கொண்டு விசாரிக்கலானார். அப்போது சொன்னார் மாரியப்பபிள்ளை தனது பூர்வோத்திரத்தை.

“எனக்கு 15 வயதிலேயே, கலியாணம் ஆகிவிட்டது. மறு வருஷமே ஒரு பெண் பிறந்தது. ஐந்து, ஆறு வருஷத்துக்கெல்லாம் என்முதல் தாரம் என்னிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் தாய்வீடு போனாள். நான் வேறே கலியாணம் செய்துகொண்-