பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

17


இருக்கும். அதைப்போலவே மங்கை மனமாவட்டம்கொண்டாலும் தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்பபிள்ளைக்கு வந்த எண்ணம். தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும்போது, “எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப்படாதீர்கள்” என்று கூறினான்.

அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய சாரதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்பபிள்ளை. கலியாணம் முடிந்து, விருந்து முடிந்து, மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் ‘இன்பம்’ பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மிவிம்மி அழும் சாரதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினானனாய் படுத்துப் புரண்டான்.

மறுதினம், ராதாவுக்கு, காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்கவேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால், சாரதாவுக்குக் காய்ச்சல் விட்டபிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்கு போய்விட்டால் எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும் என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான்.

மாரியப்பபிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால் பரந்தாமனை, “டேய் பயலே. அங்குப் போய்த்தான் என்ன செய்யப்போகிறாய். இங்கேயே இருப்பதுதானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ, தண்ணியோ குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக்கொள்

2