பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

41


“இதுதானே உங்கள் வழக்கம்! இது என்ன தவடையா ரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை....” என்று கொஞ்சினாள் ராதா.

“அடடா! பாபம் கன்னம் சிவந்துவிட்டதே! சாரதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே...”

“போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப்போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சாரதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக்கொண்டிருந்தான்.

“ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!” என்று கூறிக்கொண்டே, ராதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான்.

“இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கூறிக் கையை இழுத்துக்கொண்டாள், அந்த வேகத்தில் வளையல் உடைந்து கீறிக்கொண்டதால், பொன்னிற மேனியில் செந்நிற இரத்தத் துளியும் வந்தது.

“பார்! நீ செய்த வேலையை” என்று கரத்தைக் காட்டினாள்.

“சூ! மந்திரக்காளி! ஓடிப்போ!” என்று கூறிக்கொண்டே, கருப்பையா, அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான். அவன் அறிந்த மந்திரம் அது!

“ஒரு சங்கதி கருப்பையா! நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். நாம் சற்று ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரோ ஜமீன்தாராம்; அவர் தங்கையாம். இருவரும் வருகிறார்களாம்” என்று எச்சரித்தாள்.

அன்றிரவு ராதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர் புடவை உடுத்திக்கொண்டால் அழகாக இருக்கும்.