பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கபோதிபுரக்


பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் ராதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.

கோகிலம், ராதாவின் சேதி பூராவையும் ஒன்று விடாது கூறினாள். ஒரு “போட்டோ“ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, “இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், சாரதாவா, அவள் மிரளுகிறாள். இந்தக் கருணானந்தன் செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி” என்று கொஞ்சினான், யோகி வேடம் பூண்ட போகி.

“உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே” என்று இசைந்தாள் கோகிலம் கிண்டலாக.

“கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது, இயல்பு. இல்லாதது கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்.

“பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான்
பேசினாயா நமச்சிவாயா என்பான்
சிவனையோ திருநீறு எனக்கேட்பான்”

என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.

“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு”

என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்த வில்வாபிஷேகனை, வேண்டிட வேண்டும்” என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது அடடா,