பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கபோதிபுரக்


அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள்? எங்கே? தன் தாய் வீட்டுக்கு. ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம், அவன் உயிர் போகும் முன்னம் ராதா வந்து பார்த்துவிட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என ராதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் ராதா பதைத்து, கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள், தன் காதலனைக் காண.

“சாரதா வரவில்லையே, சாரதாவுக்கு என்மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத்தடைபோல வந்தேன். சாரதா என் மனத்தைக் கொள்ளைகொண்ட சாரதா...” என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான்.

கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்கு கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். “வந்தாளா சாரதா“ என்று கேட்பான்.

“தம்பீ, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு” என்பாள் சாரதாவின் தாய்.

“தூக்கம்! எனக்கா! அம்மணி நான் செல்கிறேன் சாரதா இங்கு வரமாட்டாள். நானே அங்குச் செல்கிறேன்.

போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே? நான் செத்துதான் பல வருஷங்களாயிற்றே.

எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா?

தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம்.