பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

71


ஓஹோ! ஊரைக்கேள், சாராதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல். சாராதா உன் மகள்தான். நீ சொல், சாராதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா!

யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா சாராதாவை! இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் சாராதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான். ஆகவேதான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள்.

சாரதாவைப் பெற்றவள் அவள். அவளே சாரதாவைக் கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ சாரதா யாருக்குச் சொந்தம் கூறு எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்.

“கதவைத் தட்டுவது யார்?”

“அம்மா! நான்தான் சாரதா!”

“வந்தாயா, கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை...” என்று கூறி, சாரதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.

பரந்தாமனைக் கண்டாள் சாரதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று.

உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள்.

அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜூரமாக இருந்தபோது சாரதாக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்-