பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வழக்கம். இன்றோ "கப்பலோட்டிய தமிழன்" என் பதே அவருக்கு சிறப்புப் பெயராகி விட்டது.

கடந்த நான்கு பதிப்புகளை விட இந்த ஐந்தாம் பதிப்பில் மேலும் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள் ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் ளுகிறேன். பொதுவாக வ.உ.சி. யின் வரலாற்றைக் கூறும் இந்நூலில் தக்க ஆதாரங்களோடு கிடைத்த செய்திகளே இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஆண்டுக் கொரு பதிப்பாக ஐந்து பதிப்புகள் வெளி வர முடிந்த தற்கு தமிழ் மக்கள் தந்த பேராதரவே காரணமாகும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

வ.உ.சிதம்பரனாரைப் பின்பற்றி இந்திய விடு தலைப் போரில் பங்கு கொண்ட எல்லா தமிழ் வீரர் களுக்கும் இந்நூலைக்

காணிக்கையாக்குகின்றேன்.

வாழ்க தமிழர் வீரம்!

சென்னை

20-9-49

}

ம.பொ.சிவஞானம்