பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

11


உழைத்துக் கூலி பெறும் நாட்களிலேயே அரை வயிற் றுக் கஞ்சிக்கும் வழியின்றி அவதிப்படும் ஏழைத் தாழிலாளர்கள் வேலை நிறுத்த நாட்களில் குடும்பத் தைக் காப்ப தெங்ஙனம்? அந்தத் தொழிலாளர்கள் தங்கள் மனைவி மக்களுடன் பட்டினி கிடக்க நேர்ந்தது. இதை அறிந்த ஒரு வீரர் கருணையுடன் முன்வந்து தமக்குத் தெரிந்த வழக்கறிஞர்களின் து ணையுடன் து மக்களிடம் பணம் வசூலித்து வேலை நிறுத்தஞ் செய்துள்ள தொழிலாளர்களுக்கு உதவி, அவர்களு டைய மனைவி மக்களைக் காப்பாற்றினார். அந்த வீர ரின் வேண்டுகோளுக்கிணங்கி, வேலை நிறுத்தஞ் செய் துள்ள 2000 தொழிலாளர்களில் 1000 ேப ருக்குத் தூத்துக்குடி நகர மக்கள் தற்காலிகமாக வேறு வேலை களைக் கொடுத்து ஆதரித்தனர். வேலை நிறுத்த நாட்க ளில் நாள்தோறும் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களில் அவ்வீரர் பேசுவார். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மில் முதலாளி கள் இணங்கினாலொழிய பணியக் கூடாதெனப் பறை சாற்றுவார். அவரது உணர்ச்சிமிக்க வீர உரைகளைக் கேட்ட தொழிலாளர்கள் உறுதியும் ஊக்கமுங் கொண்டு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நட டத்தி வந்தனர். இதனால் மில் முதலாளிகள் அவர் மீது சீற் றங் கொண்டனர். அவர் முதலாளிகளைக் கெடுக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணங்கொண்டு தொழி லாளர்களை வேலை நிறுத்தஞ் செய்யத் தூண்டினார் என்றும், அவரது சொற்பொழிவுகளால் ஊரில் கலக மேற்படுமென்றும் முதலாளிகள் மாஜிஸ்திரேட்டுக்கு மனுச் செய்தனர். மாஜிஸ்திரேட், அத்தொழிலாளர்