பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

31







அன்னியக் கத்தி வைத்துள்ள தொழிலாளியிடம் க்ஷவ ரஞ் செய்து கொள்ள மாட்டார். பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தைஎதிர்த்து வங்கமண்ணிலே போர் துவங்கி விட்டதைக் கண்டு பூரிப்படைந்தார்; தாம் கருதிய காரியங் கைகூடி விட்டதாகக் களிப்பெய்தினார். இனி, தமிழர்களைத் தட்டி எழுப்பி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் இரண்டாவது முனையைத் தமிழ் நாட்டில் துவக்க எண்ணினார். வங்காளியரைப் போன்று தமிழ்மக்களும் தங்கள் தாயகமாம் தமிழகத் தில் ஆங்கிலப் பேரரசுக்கு அழிவுதேட வேண்டு வது அவசியமென உணர்ந்தார்.

ஆங்கிலேயர் இந்தியாவில் புகுந்தது ஆளுவதற்காக மட்டு மல்ல; இந்நாட்டின் செல்வத்தை சுரண்டிச் செல்லவும் ஆகும். சிதம்பரனார் இதை நன்றாக அறிந் தவர். ஆதலால் அவர் ஆங்கிலேய வணிகக் கூட்டத் தின் மீதே தமது முதல் தாக்குதலை ஆரம்பித்தார். தூத்துக்குடிக்கும் சிங்களத்திற்கும் இடையில் வாணிபப் பொருள்களைப் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் கப்பல்களே ஏ ற்றுமதி இறக்குமதி செய்து வந்தன. அக்கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆணி வேரான வெள்ளை வணிக ருடையது. நாட்டில் தோன்றிய தேசீய இயக்கத்தை அவ்வெள்ளையர் கம்பெனி வெறுத்தது. மேலும், அக்கம்பெனி இந்திய வாணிபம் வளர வொட்டாது வணிகர் தடை செய்கிறதென்ற எண்ணம் இந்திய களிடையே பரவியது.

பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் கொட்டத்தை அடக்க எண்ணி தூத்துக்குடி இந்திய வணிகரின் ஆதரவு கொண்டு 1906-ம் ஆண்டில் சுதேசிக் கப்பல் கம்பெனி யொன்றைத் தோற்று விக்கத் துணிந்தார் சிதம்பரனார். ஆரம்பத்தில் வணிகர் சிலர் சிதம் பரனாரின் முயற்சி வெற்றி பெறப் பணஉதவி புரிந்த