பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கப்பலோட்டிய தமிழன்







தியைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் மனதில் நாட் டுப் பற்றாகிய தீ சுடர்விட்டு எரியத் தொடங்கியது. மக்கள் மன உறுதியை அறிந்த பிரிட்டிஷ் கப்பல் கம் பெனி முதலாளிகள் சிதம்பரனாரை அணுகி, சுதேசிக் கப்பல் கம்பெனியை விட்டு விலகுவதாயின் லட்சம் ரூபாய் தருவதாக மன்றாடினர்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்பின்னர் வேறொன்று கொள்வாரோ?

என்று பாரதியார் பகர்ந்ததுபோல் நாட்டின் விடு தலைப் போரில் தமது உயிரையே அர்ப்பணிக்கத் துணிந்த வீரர் பொருளுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிவாரோ? வெள்ளையரின் வஞ்சக வலையில் சிக்க மறுத்து அவர்களை விரட்டி விட்டார். ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

என்ற வள்ளுவரின் குறள் மொழியை குரு மொழி யாகக் கொண்டவரன்றோ சிதம்பரனார்.

று

சிதம்பனார், கப்பல் வாணிபத்தோடு நில்லாமல் கைத் தொழில் - விவசாய வளர்ச்சியிலும் கவனம் செலு தினார். 1921-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதியன்று சன்னை விவசாய கைத்தொழில் சங்கம் லிமிடெட் ஒன்றை சென்னை நகரில் துவக்கி வைத்தார். தொழில் துறை யில் அனுபவமுள்ள பலர் அவருக்குத் துணைபுரிந்தனர். பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் மூலதனம் சேர்க்க திட்ட மிட்டார். பங்குத் தாகையான பத்து ரூபாயையும் பத்து மாதத்திற் குள் பல தவணைகளில் செலுத்தலாமென சங்கம் அறி வித்தது. ஏழைத் தொழிலாளர்களும் உழவர்களும் சங்கத்தின் பங்காளிகளாகச் சேர வேண்டு மென்ப தற்காகவே இந்தச் சலுகை ஏற்படுத்தப் பட்டது.சங் கத்தின் குறிக்கோள்களாவன: