பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

39







உழவர், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தித் தரல்.

உழவும், கைத்தொழிலும் நவீன கால முறைப் படி வளர்ச்சி பெறச் செய்தல்.

சோப்பு, மெழுகுவர்த்தி பித்தான் ஆகிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற் சாலைகளை ஏற்படுத்தல்.

சுதேசிக் கைத்தொழில்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தொழிற்கல்லூரி யொன்றை ஏற் படுத்தல்.

சென்னை மாகாணத்தின் பல ஜில்லாக்களிலும் தரிசாகக் கிடக்கும் விளை நிலங்களை வாங்கி, விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ய உழ வர்களுக்குப் பயிற்சி அளித்தல்.

சபை

மற்றும், தரும சங்க நெசவுசாலை, தேசீயப் பண்டகசாலை என்ற இரண்டு துணை ஸ்தாபனங்களையும் தூத்துக் குடியில் தோற்றுவித்தார். இந்த ஸ்தாபனங்களுக்கு மக்களிடையே ஆதரவு தேட சுதேசிப் பிரசார யொன்றையும் தமிழகத்தின் தலைநகராகிய சென்னை யில் நிறுவினார். திரு.வி. சர்க்கரை செட்டியாரவர்கள் இச்சபையின் தலைவராக இருந்து சுதேசிய வளர்ச் சிக்குப் பணிபுரிந்தார்.

வடக்கே வங்கப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்தால் ஆங்கில சாம்ராஜ்யம் ஆட்டங் கண்டிருந்தது. அதே சமயத்தில், தெற்கே தமிழகப் போர் முனை யில் ஆங்கி லேயரின் கப்பல் வாணிபச் சுரண்டலுக்கு முடிவு கட்ட முனைந்தார் சிதம்பரனார். ஆகவே, சாம்ராஜ்ய மென்னும் நச்சு மரமானது இந்திய மண்ணில் வேரு டன் விழுந்து விடுமோ என்று அதிகாரவர்க்கம் அச்சங் கொண்டது.