பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

43







தேசீயக் கல்வி ஆகியவற்றின் அவசியத்தை விளக்கிப் பிரசாரஞ் செய்து வந்தனர். சங்கம் வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளர்வதாயிற்று.

துறவி சுப்பிரமணிய சிவா

ளம்

சுப்பிரமணிய சிவா, என்பவர் மதுரை ஜில்லா வத்தலக் குண்டு என்னும் ஊரில் கிராம முனிசீப் ஒருவரின் மகனாகப் பிறந்தவர். ஆங்கில ஞானமும், தமிழறிவும் ஒருங்கே படைத்தவர். இளமையிலேயே மனைவியைப் பிரிந்து, குடும்ப வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டவர். வீட்டை வெறுத்து வெளியேறிய நிலையி லும் நாட்டை வெறுக்க அவரால் முடியவில்லை. ளமைப் பருவம் காரணமாக இயற்கையாகவே புரட்சியுள்ள ம் படைத்திருந்த சிவா, நாட்டில் வளர்ந்து வந்த விடுதலை இயக்கத்தினால் புத்துணர்ச்சி பெற்றார். அஞ்சா நெஞ்சமும்,நினைத்த மாத்திரத்தி லேயே எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அவ ரிடம் நிரம்பியிருந்தது. தன்னந்தனியே, கிராமம் கிராமமாகச் சென்று சுதேசிப் பிரசாரம் செய்து வந்த சிவா, 1907-ம் ஆண்டு திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். அவரது வருகையை அறிந்த தேசாபிமான சங்கத்தார் அவரைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன் படுத்திக் கொண்டனர்.சிவா,பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வந்தார். சிவாவின் சொற்பொழி வைக் கேட்க வெகு தூரத்திலிருந்தும் மக்கள் திரள் திரளாகவந்தனர். சிவா, தூத்துக்குடிக்கும் வந்து பல பொதுக் கூட்டங்களில் பேசினார். இக்காலத்தில் சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாள ராக விருந்ததால், கம்பெனி வேலை முடிந்ததும் மாலை நேரங்களில் தூத்துக்குடி கடற்கரையில் நடை பெறும் பொதுக் கூட்டங்களுக்கு வந்து சிவாவின் பேச்சைக் கேட்டு அகமகிழ்வார். இருபத்திமூன்று வயது கூட நிரம்பப் பெறாத இளைஞரான சிவாவின்