பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கப்பலோட்டிய தமிழன்







துறவிக் கோலமும், துடி துடிப்பான பேச்சும் சிதம்பரனாரின் சிந்தையைக் கவர்ந்தன. "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்னும் ஆன்றோர்மொழிப்படி சிதம்பரனாரும், சிவாவும் பிரியா நட்பு கொண்டனர். வ.உ.சி. பேசுகிறார்!

நாளடைவில், பொது மக்கள் வற்புறுத்தலின் பேரில் சிதம்பரனாரும் பொதுக் கூட்டங்களிற் பேசலானார். சிவாவின் பேச்சில் நெருப்புப் பொறி பறக்கும்; சிதம் பரனார் பேச்சு சூறைக் காற்றுபோல் சுழற்றியடிக்கும். ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயுடன் காற் றும் சேர்ந்தால் கேட்க வேண்டுமோ? மக்களின் மனத் தில் நாட்டுப்பற்று நன்கு சுடர்விட்டெரியலாயிற்று. வெள்ளை முதலாளிகளின் கொடுமைகளுக்கு ஆளாகி யிருந்த ஹார்விமில் தொழிலாளர்களுக்கு இவர்களின் ஆவேசப்பேச்சுக்கள் புத்துணர்ச்சியை உண்டாக்கின. சுதேசிப் பொருள்களை ஆதரிக்க வேண்டியதன் அவசி யத்தை வாதத் திறமையுடன் வற்புறுத்திக் கூறுவார் வ.உ.சி. அன்னியப் பொருள்களை விட சுதேசிப் பொருள்களின் விலை அதிகமாக இருக்கிறதே' என் போருக்கு, "அதிக விலையா? யாருக்குக் கொடுக்கிறீர் கள்? உங்கள் நாட்டுமக்கள் - உங்கள் சகோதரர்களுக் குத்தானே!' எனப் பளிச்சென்று பதிலளிப்பார்.

இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது; அவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் அமைதி குலை யு ம்; அபாயம் கேரும்" என்பது அக்காலத்தில் ஆங்கிலே யர் அடிக்கடி பாடி வந்த பல்லவி. அதற்கு 'ஆமாம்' போட்டனர், மிதவாதக் கூட்டத்தார். அவர்களின் கூற்றை ஆவேசமாகக் கண்டிப்பார் வ.உ.சி.

'நாம் ஆளத்தெரிந்து கொண்டு வந்தால்,நம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பார்களாம்! இது அறியா மைப் பேச்சு. நீந்தத் தெரிந்து கொள்ள விரும்பு