பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

53







டோம். இனியும், அடக்கு முறைகளால் ஆள்வது ஆகாத காரியம். சுட்டுக் கொல்வதல்ல; சதை யைத் துண்டம் துண்டமாக வெட்டி எடுத்து வேதனைப்படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. தயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாயாது, இது திண்ணம்.”

சிதம்பரனார் பதிலுரைத்த பான்மை கண்டு, கலெக்டர் விஞ்சின் ஆத்திரம் அதிகரித்தது திருநெல்வேலி ஜில்லாவை விட்டு உடனே வெளியே றச் சம்மதிக்க வேண்டுமென்றும், அரசியல் கிளர்ச் சியில் ஈடுபடுவ தில்லையென நன்னடக்கை ஜாமீன் தரவேண்டுமென்றும் சிதம்பரனாரிடம் கலெக்டர் கூறி னார். சிதம்பரனார், ஜாமீன் தரவோ, ஜில்லாவை விட்டு வெளியேறவோ தம்மால் இயலாதென்றும்,வேண்டு மானால் தம்மைக் கைது செய்யலா மென்றுங் கூறி னார். உடனே சிதம்பரனாரும் சிவாவும் கலெக்டர் முன்னிலையிலேயே கைது செய்யப்பட்டார்கள். சிதம் பரனாரின் இல்லத்தையும் போலீசார் சோதனை செய்து சில கடிதங்களைக் கைப்பற்றினர்.

திருநெல்வேலிக் குழப்பம்

சிதம்பரனார் கைது செய்யப்பட்ட செய்தி திருநெல் வேலி முழுதும் காட்டுத்தீபோல் சில வினாடிகளுக்குள் பரவியது. மறுநாள் (மார்ச்சு மாதம் 13-ம் தேதி) வர்த்தகர்கள் கடையடைத்தனர்; மாணவர்கள் பள் ளிக் கூடங்களுக்குச் செல்லாது பவனி வந்தனர். இவ் விதமாக ஊர் முழுவதும் கடையடைப்பும் கொந்த ளிப்புமாயிருந்தன. தேச பக்தர்களும்,தேசீய ஸ்தா பனங்களும் சிதம்பரனாரைக் கைது செய்ததைக் கண் டித்துப் பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத் தினர். நகரில் அமைதியைக் காக்கப் போலீஸ் படை தருவிக்கப்பட்டது தொழிலாளர்கள் சிறுசிறுகூட்டங்