பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

 கோட்டையில் வேலை நிறுத்தம் எனும் 'வெடி' வைத்

துத் தகர்த்தார்.

தூத்துக்குடியில்

வீதிக்கு வீதி கூட்டங்கள் போட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமாறு மக்கள் உள்ளத்தே வீரக் கனலை மூட்டினார்.

இவ்வளவும் 1907-1908 ஆகிய இரண்டே ஆண்டு களில் நிகழ்ந்தன. இதன் விளைவென்ன? ஆங்கில ஏகாதிபத்திய - முதலாளித்துவ -வாணிபக் கூட்டத் தார் ஒன்றுதிரண்டு தளபதி சிதம்பரனாரைச் சிறைப் படுத்தி 'நீதி'யென்ற பெயரால் இருஜென்ம தண்டனை விதித்தனர். சிறையில் செக்கு வலிக்க வைத்தனர்; கல்லுடைக்கச் செய்தனர்; அறுசுவை யுண்டு அரசர் போல் வாழ்ந்த செல்வச் சிதம்பரனாரை கேழ்வரகுக் கூழ் குடிக்க வைத்துக் கொடுமைப் படுத்தினர். ஆம், ஏகாதிபத்தியம் சிதம்பரனாரைப் பழிக்குப் பழி வாங்கியது. நாமக்கல் கவிஞர்.

வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட

வருத்தமெலாம் விரித்துரைக்கில் வாய்விட்டேங்கி கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டக்

கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்

என வருணித்திருப்பது மிகையன்று. சிதம்பரனார் பிறவித் தலைவர். மதி படைத்த தலைவர் பலருண்டு இந்த நாளில். ஆனால், அவரெல்லாம், மற்றவர் இன் னல் கண்டு உருகும் மனம் படைத்தாரில்லை. சிதம்பர னாரோ மதியும் மனமும் ஒருங்கே படைத்த மாபெருந் தலைவர். எனினும் சிதம்பரனார் செய்த புரட்சிச் செயல் நம் நாட்டவரால் நன்கு போற்றப்படவில்லை.