பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கப்பலோட்டிய தமிழன்







கொடுமையான இக் காரியங்களை எக்காரணங் கொண்டும் நான் ஆதரிக்க முடியாது. இந்தப் பிழைகளையும், முட்டாள் தனங்களையும் நீங்கள் உடனே கவனிக்க வேண்டும். ஒழுங்கை நாம் நிலைநாட்ட வேண்டியதுதான். ஆனால், கொடுமை மிதமிஞ்சிவிடின், ஒழுங்கென்பது நிலைக்குமோ? மற்றும், வெடிகுண்டுக்கு அதுவே மார்க்கமாகும்."

லார்டு மார்லியின் கண்டனத்திற்குள்ளான நீதிபதி பின்ஹே, வேறு மாகாணத்திற்கு மாற்றப்பட்டார். ஆத்திரம் கொண்ட மக்கள் மனதில் ஆறுதல் ஏற்படுத் தவே, இந்த மாறுதல் செய்ததாக அரசாங்க வட்டா ரத்தில் கூறப்பட்டது.

சிதம்பரம் பிள்ளை, தமக்கு செஷன்ஸ் நீதிபதி விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி சென்னை ஹைக்கோர்ட்டுக்கு மனுச்செய்தார். 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி பிரதம நீதிபதி ஆர்னால் ரைட், நீதிபதி மன்றோ ஆகியவர்கள் முன்பு அப்பீல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசாங்க தரப்பில், பாரிஸ்டர் ரிச்மண்ட் ஆஜராகி பிள்ளையவர்களுக்கு செஷன்ஸ் கோர்ட்டார் விதித்த தண்டனையை மாற்றக் கூடா தென்று வாதாடினார். நவம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதிகள் தீர்ப்புக் கூறினர். அது வருமாறு:- "ஆங்கிலேயர்கள் ஆளும் வகுப் பாரா யிருப்பதை ஒழித்துவிட வேண்டு மென்பதே பிள்ளையின் நோக்கம். அவர், அன்னிய சரக்குப் பகிஷ் காரத்தை வற்புறுத்திப் பேசியது சுதேசிக் கைத் தொழில்களின் அபிவிருத்திக்காக அல்லாமல், ஆங்கி லேயரை வெளியேற்ற வேண்டு மென்பதற்காகவே யாகும்