பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

89







அதிகப்படியான வாக்குகளால் தீர்மானம் நிறைவேறி விட்டது.பிள்ளையவர்கள் சென்னைக்குத் திரும்பியதும் ஒத்துழையாமைத் திட்டத்தால் விடுதலைப் போர் வெற்றி பெறாதெனப் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு விட்டு காங்கிரசிலிருந்து விலகிக் கொண் டார். ஒத்துழையாமையைப் பற்றி பிள்ளையவர்களின் கருத்து பின் வருமாறு:-

6

"நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதையேனும் அரசாங்கத்தார் நமக்குத் தந்தாலும் தர மறுத்தாலும், நாம் அவருக்கு வந்தனம் கூறி, நமது தேச நிர்வாக விஷயத்தில் அவரோடு "ஒத்துழைத்தல்' வேண்டுமென்று நமது கிழவர்கள் (மிதவாதிகள்) கூறுகின்றனர். இஃது தமக்குரியவற்றைப் பிறர் தரினும்,தரா விடினும் அது தமது விதியென்று கருதிப் பிறர்க் குப் பண்பு செய்யும் கிழவர் செயல் போன்றது.

"நாம் அடைய விரும்பும் நமது உரிமைகள் அனைத்தையும் ஒருங்கு அரசாங்கத்தார் நமக் குத் தரும் வரையில் நாம் அவரோடு நமது தேச நிர்வாக விஷயத்தில் ஒத்துழைக்க மறுக்க வேண்டு மென்று நமது தற்காலத் தலைகள் (காந்தியடிகளும் அவரைப் பின்பற்றுவோரும்) கூறுகின்றனர். இந்த "ஒத்துழையாமை", தின் பண்டம் முழுவதும் தமக்குத் தரும்வரையில் அதன் ஒரு பகுதியை ஏற்காது தாய் தந்தைய ரோடு. கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தை கள் செயல் போன்றது.