பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கப்பலோட்டிய தமிழன்







"நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதையேனும் அரசாங்கத்தார் நமக்குத் தருவதா யிருந்தால், அதற்காக நாம் அவர்க்கு வந்தனம் கூறி, அவரோடு உடன்பட்டு உழைத்த லும், எதையேனும் அவர் நமக்குத் தர மறுப்பின் அது விஷயத்தில் நாம் அவரோடு உடன்படாது மாறுபட்டிருத்தலும் வேண்டுமென்றே நாம்

(திலகர் குழுவினர்) விரும்புகிறோம். இச்செயல் தந்தபோது உவந்தும்

தமக்குரியவற்றைத்

தராதபோது வெகுண்டும் நிற்கும்

காளையர்

செயல் போன்றது. சுருங்கக்கூறின், ஒத்துழைத்த

லும், ஒத்துழையாமையும் ஏககாலத்தில் நிகழ வேண்டு மென்பதே நமது அவா.

மீண்டும் 1927-ம் ஆண்டு இவர் காங்கிரசில் பிரவே சித்து, அவ்வாண்டு நடை பெற்ற சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல். மகா நாட்டில் தலைமை வகித் தார். அவர் தமது தலைமை யுரையில்,

"எனது கோட்பாடுகளுக்கு மாறான நீதி மன்ற பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம், சட்ட சபை பகிஷ்காரம் முதலிய பகிஷ்கார முறைகளெல் லாம் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கி, காங்கிரஸ் மகா சபை தனது கல்கத்தா விசேஷ மகா நாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்ப காங்கிரசில் புகலாமென்று நினைத் தேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.