பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. சிதம்பரம் என்ற கப்பலை
இராஜாஜி மிதக்கவிட்டார்

கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை தனது கடைசிக் காலத்தில் அரசியலிலே இருந்து விலகி விட்டார். அதனால், தமிழ் மக்கள் அவரை மறந்து போனார்கள். அவர் இறந்த பின்பு மூன்றாண்டுகள் அவர் நினைவு நாளை விழாவாகக் கொண்டாட தமிழ்நாட்டில் எவரும் முன்வரவில்லை.

1939-ஆம் ஆண்டில் சென்னை இராயப்பேட்டைக் காங்கிரஸ் மண்டபத்தில், நன்றி மறவாத சில தமிழர்கள் சிதம்பரம் பிள்ளையின் உருவச் சிலையை அமைத்து விழா எடுத்தார்கள். அந்த விழாவுக்கு நாவலர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் சிலையைத் திறந்து வைத்துப் பேசும் போது, தூய தமிழர் சிதம்பரனார் என்னுடைய முதல் அரசியல் குரு என்றார்.

சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் அவரது நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அவர் தனது வாழ்த்துச்