பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

105

பராமுகமாய் விட்டு விட்ட சம்பவம், மனிதகுல வீர வரலாற்றுக்கே பரிதாபமான களங்கமாக இருந்ததைக் கண்டு தமிழர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைதான் திகழ்ந்தது.

கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் தனது சுதந்திரப் பணிகளை வாடிய பயிரைப் போல வதங்கிக் கொண்டே பாடியபடி மறைந்தார்! மாவீரன் சுப்பிரமணிய சிவா, சிறையேகிய தேசத் தொண்டால் உடல் முழுவதும் குஷ்ட நோய் பரவியவாறே, ஊர் ஊராகச் சென்று பிச்சைக்காரனாகப் பிழைத்து பாப்பாரப்பட்டி என்ற ஊரிலே மாண்டார். தமிழ்நாட்டுத் தியாக மூர்த்திகளின் தலைமகனான வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சிறு கடை வைத்து சொக்கலால் ராம்சேட் பீடிகளையும், கிருஷ்ணாயில் டப்பாவின் எண்ணெயையும் சிறு சிறு உழக்குகளால் அளந்து ஊற்றிப் பிழைக்கும் வறுமையிலே வாடியும், இல்லாமல் தனது கடைசி நாட்களைக் கஷ்டங்களோடு போராடிக் கழித்து மறைந்தார்!

ஆனால், தேசத் தொண்டாற்றிய இந்த மாவீரர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு அருந்தொண்டுகளைச் செய்ததால், தமிழ் உலகம் இன்றும் அவர்களை மறக்காமல் வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. பாரதியார் கவிப்பேரரசர் அவர் பாடிய பாடல்கள் இன்றும் அவரது திருப்பெயரை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. மாவீரர் சிவா, நாடகங்கள், மொழிபெயர்ப்பு. ஆய்வு நூல்கள் எழுதிய தமிழ் வெறியர். நீதிமன்ற வாதாட்டங்களிலே கூட திருக்குறளைச் சான்றுக்காக