பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

109

ஆங்கில மொழியிலே எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலப் பேராசிரியரது வாழ்வியல் ஒழுக்க ஞான நூலை தமிழில் மொழியாக்கம் செய்து ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டின் சமய அறிவையும், நெறிகளையும் மக்கள் சரியாகப் பின்பற்றவில்லை. அவர்களது அரைகுறையான சமய ஞானத்தால் நமது நாடு வீழ்ச்சி அடைந்தது. எல்லாம் விதியின் வழியே நடக்கும் என்ற கொள்கைக்குத் தவறான பொருள் கொண்டுவிட்டார்கள். அதனால் மக்கள் செயலற்றுச் சோம்பினார்கள்.

விதி விதி என்று ஆழ்கின்றார் வீணாகத் துன்பில், விதிவிதிக்கத் தம்மையன்றி வேறு - பதி ஒருவன் உண்டென்று நம்பிய ஒரு சிலர், இங்கு அன்னாரின், கண்டறியேன் - பேதையரைக் காண் என்று சிதம்பரம் பிள்ளை தனது மெய்யறிவு நூலில் கூறுகின்றார்.

அறநெறிகளைப் போற்றாத, கடைப்பிடிக்காத மக்கள் என்றும் உயர்வு பெற முடியாது என்பது பிள்ளையின் சித்தம். இதை அவர், ‘அகமே புறம்’ என்ற நூலில்,


      “அறத்தை அறிய அறிவே மறமாம்;
      அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;
      அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;
      அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்”

– என்று, சிதம்பரம் பிள்ளை அறம் என்ற தத்துவத்தின் மூலமாக, மிருகத்தன்மை, வீரத்தன்மை, மனிதத்தன்மை